62 | பெரியோர் வாழ்விலே | ஒரு நாள் தோட்டக்காரன் அழகான பூக்களைப் பறித்து வந்தான். அவற்றை வீட்டிலிருந்த கிண்ணங்களில் வைத்தான். தாகூருக்கு அந்தப் பூக்களைப் பார்த்ததும், ஒர் ஆசை தோன்றியது.
“இந்தப் பூக்களை நன்றாகப் பிழியவேண்டும். உடனே அவற்றிலிருந்து சாறு வரும். அந்தச் சாற்றில் நமது கட்டைப் பேனாவைத் தோய்த்து, அழகாகப் பாடல்கள் எழுத வேண்டும்” என்று நினைத்தார்.
நினைத்தது போல் செய்ய முயன்றார். சில பூக்களை எடுத்துக் கசக்கினார். பலங்கொண்ட மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு பிழிந்து பார்த்தார். ஆனால் ஒரு சொட்டுச் சாறுகூட வெளிவரவில்லை.
உடனே, அவர் சாற்றைப் பிழிந்தெடுக்க ஓர் இயந்திரம் செய்யவேண்டுமென நினைத்தார். அண்ணாவிடம் சொன்னார். அண்ணா அதை ஓர் வீண் ஆசை என்று நினைத்தார். இருந்தாலும், அருமைத் தம்பியின் மனம் நோக அவர் விரும்பவில்லை. உடனே தச்சனுக்கு ஆள் அனுப்பினார்.
தச்சனும் வந்தான். தாகூர் அவனிடம், “ஐயா, ஒரு மரக்கோப்பையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு குழவியை வைத்து அந்தக் குழவியை ஒரு சக்கரத்துடன் மாட்டிவிடுங்கள். சக்கரம் சுற்றும் போது குழவியும் சுற்றுமல்லவா? அப்போது, கோப்பைக்குள் இந்தப் பூக்களை நான் கொட்டுவேன். உடனே சாறு வரும். அந்தச் சாற்றில் என் பேனாவைத் தோய்த்துப் பாட்டு எழுதுவேன். என்ன புரிந்ததா?” என்றார். |
|
|
|
|