மியாவ் மியாவ் பூனையார் | மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார். பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். இரவில் எல்லாம் சுற்றுவார். எலிகள் வேட்டை ஆடுவார். பரணில் ஏறிக் கொள்ளுவார். பகலில் அங்கே தூங்குவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். மெல்ல மெல்லச் செல்லுவார். மேலும் கீழும் தாவுவார். 'ளொள்ளொள்' சத்தம் கேட்டதும் நொடியில் ஓடிப் பதுங்குவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார், | | |
|
|