அந்த மிருகம் | டக்டக் சத்தம் போடுமாம். தாவித் தாவி ஓடுமாம். கொள்ளும் புல்லும் தின்னுமாம். குதித்து குதித்துச் செல்லுமாம். 'ஹீ...ஹீ' என்று கனைக்குமாம். கிட்டப் போனால் உதைக்குமாம். வண்டி இழுக்க உதவுமாம். வாலைச் சுழற்றி ஆட்டுமாம். சண்டித் தனமும் பண்ணுமாம். சாட்டை அடிகள் வாங்குமாம். அந்த மிருகம் என்னவாம்? அதுவே குதிரை, குதிரையாம்! | | |
|
|