யாரோ பர்ஸை எடுத்துக் கொண்டார்களே! பழனி மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான்? ரயிலிலேயே பல் விளக்கிக் கொண்டான். அதனால் முதலில் ஏதாவது சிற்றுண்டி சாப்பிட்டால் நல்லது என்றது வயிறு. அதற்குப் பணம்? சற்று முன்பாவது அப்பாவின் பணம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அங்கேயே நிற்பதால் பலனில்லை என்று நினைத்த பழனி நடந்தான். சற்று தூரத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தைக் கடந்து மறுபுறம் செல்லப் படிகள் அமைத்த பாலம் இருந்தது. பழனி அதன் மீது ஏறினான். அங்கிருந்து சென்னை நகரத்தைப் பார்த்தான். பிறகு பாலத்தின் மறுபுறம் இருந்த படிகள் வழியே இறங்கி நடந்தான். சூரியன் நகரையே எரித்துச் சாம்பலாக்குவதைப் போல உஷ்ணத்தை வாரி வழங்கினான். மே மாதத்து வெய்யில் சென்னையில் எப்படியிருக்கும் என்று சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் தெரியும். பழனியால் அந்தக் காலை நேரத்து வெய்யிலையே தாங்க முடியவில்லை. மதுரையாக இருந்தால், இந்த வெயிலுக்கு ஏர்கண்டிஷன் செய்த அறைக்குள் நுழைந்து விடுவான். அல்லது பூங்காவில் கொடிகளால் அமைந்த ‘கிரீன் ஹவுஸ்’ஸில் புகுந்து |