“உம்....எனக்கு எடுத்தவுடனே இத்தனை வேலைகள் கிடைத்து விட்டன என்று நினைக்கிறாயா? அதுதான் இலலை. நான் பல மாதங்கள் சிரமப்பட்டேன்! பசியோடு பல நாட்கள் கழித்தேன். பிறகுதான் ஒவ்வொரு வேலையாகக் கிடைத்தது.” “காளி என்னைப் பற்றிதான் நான் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். உன்னைப்பற்றி நீயாவது சொல்லக்கூடாதா?” பழனி கேட்டான். காளி நீண்ட பெருமூச்சு விட்டான். “பழனி என் கதை வெறும் சோகக்கதை, எதையோ நினைத்து இந்தப் பட்டணத்துக்கு வந்தேன். நினைத்தது நடக்கவில்லை. என் கதையைக் கேள்” என்று சொல்லிக் காளி தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். “என் அப்பாவின் முகம்கூட எனக்குத் தெரியாது. அம்மாதான் என்னை வளர்த்தாள். அம்மாவும் நானும் மீஞ்சூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தோம். என் அம்மா திடீரென்று இறந்துவிட்டாள். அம்மா ஒரு ஆசிரியர் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அந்த ஆசிரியர் நல்லவர். அவர் தம் வீட்டில் என்னை வைத்துக் கொண்டார். நான் அவர் இருந்த பள்ளியில் படித்தேன். அவர் வீட்டு வேலைகளையும் செய்து வந்தேன். ஆறு வருடங்களுக்கு முன்பு அவர் வேலையிலிருந்து ரிடையர்ட் ஆனார். உடனே தஞ்சாவூரில் வாழ்ந்த பெண்ணுடன் இருப்பதற்குக் கிளம்பிப் போய் விட்டார். அப்போது எனக்கு வயது பத்து. ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆசிரியர், “காளி உன்னையும் என்னோடு அழைத்துச்செல்ல முடியாது. என்னுடைய நிலை அப்படி. நீ நன்றாகப் படிக்கிறாய். உன் படிப்பை நிறுத்தாதே. இந்த ஊரில் உனக்கு யார் சோறு போடுவார்கள்? பேசாமல் சென்னைக்குப் போ. எங்காவது காலையிலும் மாலையிலும் வேலை செய். மற்ற நேரத்தில் |