பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

யானைகள்கள் என்னும் பகுதிப்பொருள் விகுதியீற்றுப்
குதிரைகள்பெயர்கள்

இரண்டு
மூன்றுஎண்ணாகு பெயர்கள்

‘உள்ள-இல்ல, பல்ல-சில்ல, உள-இல, பல-சில’ என்பன குறிப்பு வினையால் அணையும் பெயர்களாகும்.

மேற்கண்ட வினாப் பெயர்களும், சுட்டுப்பெயர்களும், வை விகுதிப் பெயர்களும், பொருளாதி ஆறன் அடியாகப் பிறந்த அகர விகுதிப் பெயர்களும், வகர மெய்யீற்றுச் சுட்டுப் பெயர்களும், கள் என்னும் பகுதிபொருள் விகுதியீற்றுப் பெயர்களும், இரண்டு, மூன்று முதலிய எண்ணாகு பெயர்களும், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில என்னும் குறிப்பு வினையாலணைந்த எட்டுப் பெயர்களும், இவை போல்வன பிறவும் அஃறிணைப் பலவின்பாற் பெயர்களாகும்.

இவை, இருதிணையில் அஃறிணைக்கும், ஐம்பால்களில் பலவின்பாலுக்கும் உரியவையாகும்.

இதுவரை, திணபைhல்களில் ஒன்றனை ஏற்கும் பெயர்களைப் பார்த்தோம். இனி, திணைபால்களில் பலவற்றினை ஏற்கும் பெயர் களைப் பார்ப்போம்.

அஃறிணை இருபாற் பொதுப்பெயர்

யானை வந்தது
யானை வந்தன
மரம் வளர்ந்தது
மரம் வளர்ந்தன

இங்கு, யானை, மரம் என்பன பால் பகுக்கப்படாத அஃறிணைப் பெயர்களாகம். எனவே அவை, அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் இரண்டிற்கும் பொதுவாயின. இவை, பால்பகா அஃறிணைப் பெயர் எனவும் படும். இங்ஙனம் வரும் பால்பகா அஃறிணைப் பெயர்கள் எல்லாம் அஃறிணை இருபாற் பொதுப் பெயர்களாகும்.