பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்311

அகப்பா என்னும் கோட்டையை அழித்துப் பகற்பொழுதிலேயே தீக்கிரையாக்கிய சோழன் ஒருவன் பெயரும் செம்பியன் ஆகும்.28

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி
யனிடம் தோற்றுப்போன எழுவருள் ஒருவன் செம்பியன்.29

புறாவுக்காகத் தன்னையே நிறுத்துத் தந்த சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது.30 கழுமலப் போரில் சேரனை வென்ற சோழனது பெயரும் செம்பியன் என்று கூறப்படுகிறது.31

தொடித்தோட் செம்பியன் எறிந்த தூங்கெயில் மூன்று என்றும், அவை உயர்விசும்பில் இருந்தன என்றும் கூறப்படுவது32 வியப்பே யாகும். மூன்று என்பது வானம், கழுமலம், அகப்பா என்னும் ஊர்களிலிருந்த மூன்று கோட்டைகளைக் குறிப்பதாகலாம்.

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் புகாரில் இந்திர விழாவினை முதன் முதலாகத் தொடங்கி வைத்தான் என்றும் கூறப்படுகிறது.33 இவனது வேண்டுகோளின்படி விண்ணவர் தலைவனான இந்திரன் புகார் நகரில் இந்திர விழா நடைபெறும் 28 நாளிலும் வந்திருந்து பூசனையை ஏற்றுக்கொண்டானாம்.

இவற்றையெல்லாம் தொகுத்து நோக்கும்போது,

1. புறாவுக்காகத் துலைபுக்க செம்பியன்,

2. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்,

3. அகப்பா எறிந்த செம்பியன்,

4. கழுமலம் எறிந்த செம்பியன்,

5. களவழித் தலைவன் செம்பியன்


28. ௸ 14 : 4 - 5

29. அகம். 36 : 13 : 16

30. புறம். 37 : 5 - 6

31. களவழி. 6 : 5 - 6, 23 : 4 - 5

33 : 4 - 5, 38 : 3 - 4

32. சிலப். 29: அம்மானை வரி 1

33. மணிமே. 1 : 4