பக்கம் எண் :

316மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மேலே கண்ட வரிசை காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொண்டதாகும். இந்தக் காலக் கண்ணோட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்த செய்திகள் அடுத்துள்ள அட்டவணை யிலும் அதனை அடுத்த விளக்கத்திலும் தரப்படுகின்றன.

அரசர்பாடிய புலவர்பாடல்
போரவைக்கோப் பெருநற்கிள்ளிசாத்தந்தையார், நக்கண்ணையார்புறம் 80, 81, 82, 83, 84, 85
முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளிஉறையூர் ஏணிச்சேரி முடமோசியார்௸ 13
வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளிகழாத்தலையார்௸ 368
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிஉலோச்சனார், ஒளவையார், பாண்டரங்கண்ணனார், பேரிசாத்தனார்௸ 377 ௸ 367 ௸ 16 ௸ 125

மேலே கண்ட அட்டவணையில் ஒருவனைப் பாடிய புலவர் மற்றொருவனைப் பாடிய தொடர்புச் செய்தி காணப்படவில்லை. இந்த நிலையில் இவர்களைக் கால வரிசைப்படுத்த வேறு சான்றைத்தான் தேடவேண்டியுள்ளது.

மேலே கண்ட எட்டுப் புலவர்களால் பாடப்பட்டவேறு அரசர்களை நினைவுகூர்வோம்.

புலவர்அரசர்பாடல்
சாத்தந்தையார்தித்தன், ஆமூர்மல்லன், பொருநன்புறம். 80, ௸ 80, 81,82, ௸ 82
நக்கண்ணையார்அழிசிநற். 87
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்அந்துவஞ்சேரல், ஆய் அண்டிரன்புறம். 13, ௸ 127, 135, 247, 374,375