| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 325 |
(ஆ) கோப்பெருஞ்சோழன் சோழர் வரலாற்றில் கோப்பெருஞ்சோழன், தனித்துக் காணப் படுகிறான். அவனுடைய சமகாலத்திய பாண்டிய அரசன் அறிவுடை நம்பி என்பவனாவான். அவனைப் பாடிய புலவர்களும் நம்பியைத் தவிர வேறு யாரையும் பாடவில்லை. உறையூரில் இருந்து இவன் ஆட்சி செய்ததனால், கரிகால் பெரு வளத்தானுக்குக் காலத்தால் முற்பட்டவனாக இருத்தல் கூடும். இவனைப் பாடிய பிசிராந்தையார் எனும் புலவரின் பெயர், மிகப் பழங்காலத்தில் வழங்கிய பெயருமாகும். எனவே, கோப் பெருஞ்சோழனைப் பழைய அரசனாகக் கொள்ளலாம். கோப்பெருஞ்சோழன், சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவனது தலைநகரம் உறையூர் ஆகும். அவ்வூரில் மாட மாளிகை யோடு கூடிய அவனது அரண்மனை இருந்தது. பதிற்றுப்பத்தைத் தொகுத்த ஆசிரியர் இவனைப் ‘பொத்தி ஆண்ட பெருஞ்சோழன்’1 என்று குறிப்பிடுகிறார். இதில் ‘பொத்தி’ என்னும் சொல் பொத்தியார் என்னும் புலவரை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பொத்தியாருக்கும் இவனுக்கும் இடையே இருந்தது, நட்புறவே அன்றி ஆண்டான் அடிமை என்ற நிலையில்லை. எனவே, பொத்தியாரை இவன் ஆண்டான் என்பது பொருந்தாது. இவன் பொத்தியாரை மட்டும்தான் ஆண்டானா? ஏனையோரை ஆளவில்லையா? என்று வினவுவதற்கும் இடம் உண்டாகிறது. ஆதலின், இவன் பொத்தி என்னும் இடத்தை ஆண்டான் என்று கொள்வதே பொருத்தமாய் அமைகிறது. இந்த இடம் எது? அந்த இடத்தை இவன் ஆண்டான் எனல் இயல்பாக அமைகிறதா என்பனவற்றை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். காவிரியின் வடகரையில் பொத்தனூர் என்னும் ஊர் ஒன்று உள்ளது. அது மிகப் பழமையான ஊர். அந்த ஊரின் பழம் பெயர் அல்லது மருவிய பெயர் ‘பொத்தி’ என்பதாக இருக்கலாம். கோப் பெருஞ்சோழன் தொடக்ககாலத்தில் இவ்வூரில் தன் ஆட்சியைத் தொடங்கி யிருக்கலாம். அப்போது உறையூரை ஆண்ட சோழ அரசனைச் சார்ந்தவனாக இவன் இவ்விடத்தில் ஆட்சியைத் தொடங்கி
1. பதிற். பதி. 9 : 6 |