| | கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி |
| 140 | யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். |
| | (சேவகனை நோக்கி) |
| 145 | அருள்வர தனையிங் கழையாய்! சேவக! |
| | (அருள்வரதன் வர) |
பல: | | (தனதுள்) |
| | சிந்தனை முடிந்தது. |
அருள்வரதன்: | | வந்தனம்! வந்தனம்!! |
புரு: | | நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். |
அருள்: | | ஆஞ்ஞை. |
புரு: | | (பலதேவனை நோக்கி) |
| 150 | செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் |
| 155 | ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்! |
| | (பலதேவன் போக) |
| | (தனதுள்) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் |
| 160 | பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. |
பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை.