ஜீவ: | | சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் |
| 20 | மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் |
| 25 | குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! |
குடி: | 30 | முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் |
| 35 | செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது |
| 40 | தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “ இமையவர் தமக்கும் இசையுமோ இவளது |
| 45 | பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. |
திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் - அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு - கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு - ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.