பக்கம் எண் :

162மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஜீவ: 50ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ
பத்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன்
பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது
புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு
 55ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்?
குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ!
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம்
அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன்
ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ,
 60யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும்.
அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம்
உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே
நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும்.
ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த
 65தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை.
வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன்
சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்;
ஒருவன் தனதடி யிணையடைந் துறவே
 70பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்;
மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே
செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்;
மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்;
பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர்
 75உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும்
உன்னான். ஆயினும் இன்னவை யாவும்
பிரபுத் துவமலாற் பிறவல குடிலா!
குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது.
முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்


பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான்.