பக்கம் எண் :

164மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஒற்றன்: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா!
ஜீவ110எங்குளார் நமது தூதுவர்!
ஒற்:  இதோ! இம்
   மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ்
ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே!
   (ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க)
குடி: (தனதுள்)
  ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம்
முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை.
 115போரும் வந்தது. நேரும் புரவலற்
கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன.
ஜீவ: (தனதுள்)
  துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை
ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும்
அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப்
 120படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்;
முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்!
  (குடிலனை நோக்கி)
  குடிலா! உனைப்போற் கூரிய மதியோர்
கிடையார். கிடையார். அடையவும் நோக்காய்.
கடையவன் விடுத்த விடையதி வியப்பே!
  (குடிலன் ஓலை நோக்க)
குடி: 125நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே!
உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற்
குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்!
யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும்
வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய


வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் -பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன்.