பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்165

 130உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும்
இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்!
ஜீவ: பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும்
ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங்
கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி.
குடி: 135செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்?
ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான்.
வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும்,
ஆலவா யுள்ள படைகளை யழைக்கில்
சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே.
ஜீவ: 140வேண்டிய தில்லை யீண்டவர் உதவி.
தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்.
ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன்.
பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை.
புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி
 145எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய்.
குடி: அன்றியு முடனே அவன்புறப் படலால்
வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால்.
ஜீவ: இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்?
பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம்
 150ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் ...

(ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து)

சேவகன்: விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற்
பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்
நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே.
குடி: நல்லது! நல்லது! செல்லா யப்பால்
  

(சேவகன் போக)

  (தனதுள்)


திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர்

வரி 144 - 145. இது ஒரு பழமொழி