பக்கம் எண் :

170மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

 50கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும்,
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்,
மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
பற்பல பாடியான் பட்டங் கீட்டியது
 55அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்;
இன்னமு மீதோ ஏகுவன்.” எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து
நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?
  (நீரைக் கையாற் றடுத்து)
 60நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்!
இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி.
நீரே! நீரே! என்னையுன் நிலைமை?
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
 65உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?...
(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)
ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும்.
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ.
 70எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை.
விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை.
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல


சாடு - பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிலி - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து. நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு - மண்புழு, நாகப்பூச்சி. பாடு - உழைப்பு. ஓவா - ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து - மாற்றி.

65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி