பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 171 |
| 75 | ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்! இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? | | 80 | ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? | (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) | | | விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ! எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் | | 85 | காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த |
மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும் தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி -சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் - சிற்றாடி யின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம். 87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன. தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது. |