232 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
நான்காம் அங்கம் முதற் களம் இடம் :படை பயில் களம். காலம் :காலை. (பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) குடிலன்: | | பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது... | | | (பெருமூச்செறிந்து) | | | (தனிமொழி) | | | கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின் | | 5 | எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர் ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே ! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள் இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை | | 10 | வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப் படியே பரவுமே படியெலாம் துயரம் !...(சற்று நிற்க) | | | என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி |
காண் தகும் - காணத்தக்க, மதிப்பார் - கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய - சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும். |