பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 233 |
| 15 | என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன், மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் | | 20 | உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் காலம் விடுவதார்? மேலும் இயல்பாப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அணைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? | | 25 | வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் | | 30 | நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் | | 35 | நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும். (ஜீவகன் வர) |
கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம் - (இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா - எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். ‘மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென’ என்பது ‘கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து’ என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. ‘எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்’ என்பது, ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது. |