குடி: | | அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. |
| 240 | இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! |
ஜீவ: | | நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; |
| 245 | பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? |
குடி: | | பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். |
| 250 | உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் |
| 255 | தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? |
ஜீவ: | | தவறே |
குடி: | | முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. |
ஜீவ: | | மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். |
குடி: | 260 | அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். |
பாங்கோ - தகுதியோ. குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்குமுன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு.