292 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
ஜீவ: | | அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? | குடி: | | மன்னவ! | | 265 | அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? | | 270 | வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! | | 275 | முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். | ஜீவ: | 280 | காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? | குடி: | | சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. | | 285 | அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன். கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு |
கருநா - கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் - கூட்டங்கள். காண்டும் - பார்ப்போம் 284 - 285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு - சொல்லப்படும். |