பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்293

   கல்லறை நன்றே கடிமண முடியின்...
கடிமண மதற்கோ. முடிபுனை மன்னர்
 290வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை?
வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே,
ஒருநலம் காணின் ஒருநலம் காணேம்.
ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல்
மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?
 295பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின்
பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்!
பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல்
நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம்
வெளியா யினதும்? எளிதோ இறைவ!
 300வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும்
பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
அறம்நிறை அகமும் அறிவும் அமைதல்.
பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்!
ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை.
 305ஐயோ! இனிநாம் அந்நிய ராயின்
நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும்.
அன்றேற் பெரும்பிழை!
ஜீவ: ஆ!ஆ!சரியே!
குடி: ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும்
ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை?
ஜீவ:310அரசல எனினமக் காம்பிழை என்னை?
குடி:  திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்?
உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
முடிமன் னவர்பலர் அடிதொழ நினது
தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும்


கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம்.