| | சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் |
| 140 | கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம். பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன். |
புரு: | 145 | சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்? |
குடி: | | அரசன தந்தப் புரமது சேர யாவரு மறியா மேவருஞ் சுருங்கை ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங் கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி. |
புரு: | 150 | உண்மை? |
| | (சேவகரை நோக்கி) யாரது? |
குடி; | | உதியன் கண்முன் மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்? |
| | (அருள்வரதன் வர) |
அருள்: | | அடியேன்! |
புரு: | | கைத்தளை காற்றளை கொடுவா நொடியில். |
| | (அருள்வரதன் போக) |
| | (குடிலனை நோக்கி) |
| | எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை? |
குடி: | | அணிதே! அஃதோ! சரணம் புகுந்த |
| 155 | எளியேற் கபய மியம்புதி யிறைவ! |
முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று - அழித்து.
142 - 144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் - அடைதற்கருமையான. கைதவன் - பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு.