பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்315

புரு: அவ்வழி யோநீ யணைந்தனை?
குடி: ஆம்! ஆம்!
செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே
காட்டுவ னடியேன்.
  (அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர)
புரு: (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்!
குடி: ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
 160மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை!
  (அருள்வரதன் விலங்கு பூட்ட)
புரு: எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்!
குடி: (அழுது)
  தேடியே வந்து செப்பிய வடியேன்
ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
 165முந்தியே தந்திடில்...
புரு: மூடுநின் பாழ்வாய்!
சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி.
  (சேவகரை நோக்கி) 
  சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
  (குடிலனை நோக்கி)
  நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்!
எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
  (யாவரும் சுருங்கை நோக்கிப் போக)

ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.


பிழைப்பில் - தவறு செய்தால். உறுதி - பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் - வெற்றி நச்சிடில் - விரும்பினால்.