முகுந்த நாயகன் கோவில் - திருவேளுக்கை

சிறப்புக்கள்
  1. மூலவருக்கு ஆள் அரி என்ற அழகு தமிழ்ச்சொல்லால் திருநாமம்
    அமைந்துள்ளது, ஒரு தனிச் சிறப்பாகும். ‘மன்னு மதிட்கச்சி
    வேளுக்கை ஆள் அரி’ என்பது திருமங்கையாழ்வாரின்
    மங்களாசாசனம். யோக நரசிம்மராக எழுந்தருளியிருக்கும் இவர்
    சிறந்த வரப்பிரசாதி. இவரை விட இங்கிருக்கும் உற்சவர் பேரழகு
    பொருந்தியவர்.

  2. புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின்
    கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக
    ஐதீஹம். தற்போது நரசிம்மனாகயோக முத்திரையுடன் மேற்கு
    நோக்கி அமர்ந்த திருக்கோலம். இம்மாற்றத்திற்கான காரணம்
    அறியுமாறில்லை.

  3. பேயாழ்வாரும்,     திருமங்கையாழ்வாரும்     மங்களாசாசனம்.
    பேயாழ்வார் 3 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். பேய்
    பிடித்தவர் போல் பகவான் மீது பற்றுக் கொண்டு, பாசுரம்
    பாடுபவர் என்பது தலைப்பிலிட்ட பாடலாலே விளங்கும்.

  4. மாமாட வேளுக்கை என்ற மங்களாசாசனத்தால் ஒரு காலத்தில்
    இத்தலம் அமைந்திருந்த பகுதி மாட மாளிகைகளுடன் கூடின
    பிரம்மாண்டமான தோற்றத்தோடு, பெரிய     அளவிற்கான
    பரப்பளவை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும்.
    சிதிலமடைந்து, சிறிய கோவிலாக மாறிவிட்ட இத்தலம் சமீப
    காலத்தில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப் பெற்று திகழ்கிறது.

  5. இங்கு பெருமாள், தாயார், கருடன், ஆகியோருக்கும் சன்னதி
    உண்டு.

  6. ஸ்ரீஸ்வாமி தேசிகன் இப்பெருமாள் மீது ‘காமாஸி காஷ்டாகம்’
    அருளிச் செய்துள்ளார்.

  7. நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார்.

    தனக்குரியனாயமைந்த தானவர் கோன் கெட்டான்
    உனக்குரியனாய மைந்தன் உய்ந்தான் நினைக்குங்கால்
    வேளுக்கை யாளரியே வேறுதவியுண்டோ உன்
    தாளுக்கா ளாகா தவற்கு.

    என்ற பாடலின் பொருளும் நரசிம்ம அவதாரத்துடன்
    இணைந்திருக்கும் எளிவு வியந்து போற்றுதற்குரியதாகும்.

    எல்லாமே தனக்குரியனவாக, தனக்குரியது, தனக்குரியது என்று
    எண்ணி ஆணவம் கொண்டிருந்த மன்னன் இரண்யன் அழிந்தான்.
    எல்லாமே உனக்குரியது (பகவானுக்குரியது) என்று நினைத்த
    அவனது மகன் பிரகலாதன் உய்ந்தான். இந்த வேளுக்கையில்
    ஆசையுற எழுந்தருளியிருக்கும் ஆளரியே உன் தாளினைகளைச்
    சாராதவர்கட்கு வேறு என்ன உதவியிருக்க முடியுமென்று
    வினவுகிறார்.

முன்