2.5 தொகுப்புரை

விரிவான பக்தி இலக்கியம் என்ற நிலையில் பெரியபுராணம், பரணி வகையில் சிறந்து விளங்கும் கலிங்கத்துப்பரணி, பௌத்த சமயத்தைப் பொறுத்த வரை வீரசோழிய உரை போன்றவை இக்காலப் பகுதியில் குறிப்பிடத்தக்கவையாகும். பிற சமயங்களின், பிரபந்தங்களைப் பொறுத்த வரை சீரான நிலை இருந்துள்ளது. தத்துவ நூல்களின் பங்களிப்பும் இக்காலப் பகுதியில் ஓரளவு இருந்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் யாவை?
2)
அருங்கலச்செப்பு ஆசிரியர் அறம் என்று எவ்வெவற்றைக் குறிப்பிடுகிறார்?
3)
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் யாவை?
4)
திருப்புகலூர் அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களின் பெயர்களைக் கூறுக.
5)
காலத்தால் பழமையான உலா எது?