5.4 தொகுப்புரை

இப்பாடப் பகுதியில் இடம்பெற்ற குறுந்தொகைப் பாடல்களில் ‘ஓர் ஏர் உழவன்போல’, ‘இருள் திணிந்தன்ன சோலை’, ‘கண்ணுக்கு இனிய புதுமலர் முள்ளைத் தந்ததுபோல’- எனவரும் அழகிய உவமைகளைச் சுவைத்தீர்கள். இளைய புதுமணத் தலைவனுக்குச் சமைத்துப் பரிமாறும் ஒரு மௌனக் காட்சியைப் பார்த்தீர்கள். பிரிவும், புணர்வும் அன்பை மேலும் மிகுவிக்கின்றன எனக் கண்டீர்கள். சிறந்த பாடல் வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டான பாடல்களைப் படித்து அறிந்தீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இரவில் தனித்து விழித்திருக்கும் தலைவிக்கு அனுதாபத் தோழமையாவது எது? ஏன்?
2.
தலைவன் கனவைக் கடிந்து கொள்வது ஏன்?
3.
‘தமையன்மாரின் மீன்பிடி படகுகள் திரும்பி வருகின்றன’ என்று தோழி கூறுவதில் கவிதையைத் தாண்டித் தெரியும் காட்சி யாது?
4.
இப்பாடப் பகுதியில் சிறந்த ஆசிரியப்பா வடிவத்திற்கு உதாரணமாகக் காட்டத்தக்க பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டுக.