பழங்காலத்திலேயே தமிழ் மக்களோடு ஒட்டி உறவாடிய சமணச் சான்றோர் இலக்கணங்களையும் பெருங்காப்பியங்களையும் படைத்து, தமிழ்மொழியின் வளத்திற்குத் தொண்டாற்றினர்.  அறநூல்களைப் படைத்து வளமான வாழ்க்கை மேம்பாடு அடைய வழிவகை செய்தனர். மக்கள் உள்ளத்தைக் கவரும் நீண்ட கதைகள் மூலம் தங்கள் சமயக் கோட்பாடுகளைப் பொது அறமாக்கி உரமூட்டினர்.

காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப இலக்கிய வடிவம் மாறும் என்ற உண்மையைச் சான்றோர் உணர்ந்தவர்கள். புதியன படைப்பதில் சலிப்படையாதவர்கள். காலத் தேவையைக் கணக்கில் கொண்டு உழைக்கும் திறனும் முயற்சியும் உடையவர்கள். அதனால், சைவ வைணவச் சமயச் சான்றோர் புராணங்களை இயற்றிச் சமயத்திற்குத் தொண்டாற்றியது போல, சமணசமயச் சான்றோர்களும் புராணங்களை இயற்றினர். மேலும் சிற்றிலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்தபோது அந்தத் துறையில் தங்கள் பங்கைச் செலுத்தத் தவறவில்லை.  பல்வேறு விதமான சிற்றிலக்கியங்களைப் படைத்து, சிற்றிலக்கியப் பரப்பை மேம்படுத்தினர். ஆயினும் காலத்தால் அழிந்தன சில; சமயப் பிணக்கால் மறைக்கப் பட்டனவும் மறக்கப்பட்டனவும் சில; இன்னும் ஓலைச் சுவடிகளிலேயே உறங்குவன சில. எனினும் கிடைத்திருக்கும் நூல்கள் சிற்றிலக்கியத் துறையில் அவர்கள் பதித்த சுவடுகளை அழுத்தமாகக் கூறிச் செல்கின்றன என்பது உண்மை.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. சமணர் புராணங்களை இயற்றத் தொடங்கிய சூழலை விளக்குக.
விடை
2. திரிசஷ்டி சலாகா புருஷர்கள் என்று வழங்கப்படுபவர்கள் யார்?
விடை
3. வடமொழியைத் தழுவி எழுதப்பட்ட புராணம் எது?  எந்தப் புராணத்தைத் தழுவி எழுதப்பட்டது?
விடை
4. மேருமந்தர புராணம் வலியுறுத்தும் மையக்கருத்து யாது?
விடை
5 சினேந்திரமாலை என்ற நூல் எதைப் புலப்படுத்துகிறது? அதன் வழி நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் யாவை?
விடை
6 நரிவிருத்தம் எந்தக் கோட்பாட்டை விளக்க இயற்றப்பட்டது?
விடை