நாவல் என்பது பாத்திரங்களை அடிப்படையாக வைத்தே செயல்படுவதால் பாத்திரங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இப்பாடவழி நாம் முயன்றிருக்கிறோம். ஒரு நாவல் படைப்பாளி, கதையை நடத்திச் செல்லும் பாத்திரங்களை நல்ல முறையில் படைத்துவிட்டால் நாவல் சுவைமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமையும். |