|
4.6
தொகுப்புரை
நண்பர்களே! மேற்கண்ட கதைகளின் மூலம் சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூகச் சிக்கல்களை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.
தனிமனிதச் சிக்கல்களை விளக்கும் மூன்று சிறுகதைகள் மூலம்
தனிமனித
உணர்வுகளையும் அவர்களின் உளச்சிக்கல்களையும்
அறிந்துகொள்ள முடிந்தது.
பெண்களுக்கான சிக்கல்களைக் காட்டும் மூன்று சிறுகதைகளின்
மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள
சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது
வலியுறுத்தப்படுகிறது.
சமூகத்தில் காணப்படும் சமூகச் சிக்கல்களை மூன்று
சிறுகதைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
சமூகச் சிக்கல்களுக்கு
அடிப்படையாக மனித நேயமற்ற செயலே காரணமாவதால்
மனிதநேயம், சமூகச் சீர்திருத்தம், புதுமை, புரட்சி
ஆகியவற்றின் மூலம் சமூகச் சிக்கல்களுக்கு விடை காண
வேண்டும்
என்பது அறியப்படுகிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
‘செவ்வாழை’ சிறுகதை உணர்த்தும் சமூகச்
சீர்திருத்தக் கருத்துகள் யாவை?
|
|
2. |
புதுமை, புரட்சிக்குரிய சிறுகதைகளாக இடம்
பெற்றுள்ளவை யாவை?
|
|
3. |
‘ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும்’
சிறுகதையில் ‘ஊமை முயல்’ என்ற சொல் யாரைக்
குறிப்பிடுகிறது? |
|
4. |
‘மனித நேயத்திற்கு’ உரிய சிறுகதைகளாகக்
குறிப்பிடப்படும் சிறுகதைகள் எத்தனை? அவை
யாவை? |
|
|