மாணவ நண்பர்களே ! சித்திரமே பாடலாக, பாடலே
சித்திரமாக
அமைந்த முறையை நீங்கள் இப்பாடத்தில் அறிந்து
கொண்டீர்கள்.
இப்பாடம் உங்களுக்குப் புதுவகையான கற்றல் அனுபவத்தைத்
தந்திருக்கும்.
இதன் மூலம் நீங்கள் செய்யுளின் புற அழகை, வடிவ அழகை
உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
இவை போன்ற கவிதைகளைப் படைக்கும் எண்ணம் உங்கள்
மனதில் தோன்றியிருக்கலாம்.
பல சித்திரகவிகளைப் படித்துப் பார்த்து, சுவைத்து மகிழ்ந்து
அதன்பின்
புதிதாய் எழுதத் தொடங்குக. அவ்வாறு சித்திரகவி
படைத்தால் மட்டுமே இம்முயற்சி வெற்றிபெறும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
வினாவுத்தரம் சித்திரகவியை உணர்ந்து கொள்ள ஓர்
உரைநடைப் பகுதியைத் தருக. |
|
விடை |
|
2. |
சுழிகுளம் - சித்திரகவிக்கு உரிய இயல்புகள் யாவை? |
|
விடை |
|
3. |
அக்கர சுதகம் - சித்திரகவியை விளக்குக. |
|
விடை |
| |