திருக்குறள்
சொல்-பொருள்
Words-Meaning
| • அகம்நக | - உள்ளத்தளவில் சிரிப்பது |
| • அல்லல் | - துன்பம் |
| • ஆறு உய்த்து | - நல்வழிப்படுத்தி |
| • இடித்தல் | - சுட்டிக் காட்டுதல் |
| • இடுக்கண் | - துன்பம் |
| • இனையர் | - இத்தன்மையவர் |
| • உடுக்கை | - உடுத்துகின்ற ஆடை |
| • உழப்பது | - பங்கிட்டுக் கொள்வது |
| • ஒல்லும் வாய் எல்லாம் | - இயன்ற பொழுதெல்லாம் |
| • காப்பு | - காவலாக அமைவது |
| • கிழமை | - உரிமை |
| • கேண்மை | - நட்பு |
| • கொட்பின்றி (கொட்பு+இன்றி) | - மாறுபாடு இன்றி |
| • செயற்கு அரிய | - செய்வதற்குக் கடினமான |
| • நகுதல் | - சிரித்தல் |
| • நட்டல் | - நட்புக் கொள்ளல் |
| • நவில்தொறும் | - படிக்கும் பொழுதெல்லாம் |
| • நீரவர் | - பண்பாளர்கள் |
| • புல்என்னும் | - கெட்டுவிடும் |
| • பேதையார் | - அறிவில்லாதவர் |
| • மிகுதிக்கண் | - தவறு செய்யும் பொழுது |
| • மதி | - நிலவு |
| • பகுப்பு | - பிரிவு |
| • முகம்நக | - முகத்தளவில் சிரிப்பது |