|
சிறுகாப்பியம், காப்பியத்துக்குப் பெயரிடல் முதலியன.
|
| ‘அறையும்இதில் சிலகுறைபாடு எனினும் குன்றாது |
| |
அறம்பொருள்இன் பம்வீட்டில் குறைபா டாகப்
|
| பெறுவதுகாப் பியமாகும்; புராணம் ஆகும்; |
| |
பேசின்முதல் நூல்பொருளொடு அளவு தன்மை
|
| செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னானும் |
| |
திகழும்இடு குறியானும் நூற்குப் பேராம்;
|
| உறுகலிவஞ் சிப்பாக்கை யறத்துக்கு ஆகா; |
| |
உரைப்பதுஇனி வாழ்த்தினுக்குஎப் பாவும் ஆமே.’
|
| |
16 |
கவிப்புலவன் இயல்
|
| ‘பாடுமுறை தொடர்செய்யுள் தெரிக்க வல்ல |
| |
பாவலன்நற் குணம்குலம்சீர் ஒழுக்கம் மேன்மை
|
| நீடுஅழகு சமயநூல் பிறநூல் மற்று |
| |
நிகழ்த்துநூல் இலக்கணநாற் கவிஉள் ளானாய்
|
| நாடுஉறுப்பில் குறைவிலனாய் நோயி லானாய் |
| |
நாற்பொருளும் உணர்ந்துகலை தெளிந்து முப்பான்
|
| கூடும்வயது இகந்துஎழுபான் வயதின் ஏறாக் |
| |
குறியுடைய னாகில்அவன் கவிதை கொள்ளே.’ |
| |
17 |
|
புரவலன் கவியைக் கோடல்
|
| ‘கொள்ளும்இடம் விதானித்துத் தொடையல் நாற்றிக் |
| |
கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம்
|
| துள்ளுபொரி விளக்குஒளிர முரசுஇ யம்பத் |
| |
தோகையர்பல் லாண்டுஇசைப்ப மறையோர் வாழ்த்த
|
| வெள்ளைமலர்த் துகில்புனைந்து தவிசின் மேவி |
| |
வேறும்ஒரு தவிசுஇருத்திச் செய்யுள் கேட்டே
|
| உள்ளம்மகிழ் பொன்புவிபூண் ஆடை மற்றும் |
| |
உதவிஏழ்
அடிபுலவ னுடன்போய் மீளே.’ |
| |
18 |