பாட்டியல் - பிற்சேர்க்கை 1

443


தசபிராதுற்பவம், நாழிகை வெண்பா, செருக்களவஞ்சி,

வரலாற்று வஞ்சி, ஆனைத்தொழில் என்பன.

 

‘ஆய்ந்ததசப் பிராதுற் பவம்பத் தான

  அரிபிறப்புஆ சிரியவிருத் தத்தால் வாழ்த்தில்,
 
ஏய்ந்திடுநா ழிகைவெண்பா மன்னர்க்கு ஈசர்க்கு
  எய்தியநா ழிகைவெண்பா நாலெட்டாய்ச் சொலல்,
 
வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல்,
  வரலாற்று வஞ்சிபல வரலாறு ஓதல்,
 
பாய்ந்திடுமும் மதத்துஆனைத் தொழில்நேர் சொல்லும்
  படைக்களிற்றைக் கண்டுஅரசன் பற்றிச் சேர்தல்.’    
 

13

பரணி
 
‘படைபுக்குஆ யிரம்வேழம் எதிரார் போரில்
  படப்போர்செய் தானுக்குக் கடவுள் வாழ்த்துக்
 
கடைதிறப்புப் பாலைநிலம் காளி கோட்டம்
  கழுதுநிலை காளிக்குப் பேய்ச்சொல் பேய்க்குத்
 
தொடர்காளி சொலல்அதனால் தலைவன் சீர்த்தி
  சொல்லல்அவன் சேறல்புறப் பொருள்தோன் றப்போர்
 
அடுதல்களம் விரும்பல்இவை நாற்சீர் ஆதி
  அடிஇரண்டில் ஏறாமல் பரணி பாடே.’  
 

14

காப்பியம்
 
பாடுநெறி வணக்கம்வாழ்த்து ஒன்று நாலாய்ப்
  பகர்பொருள்முன் வரஇறைவன் வெற்பு வேலை
 
நாடுநகர் பொருள்பருவம் இருசுடர்பெண் வேட்டல்
  நண்ணல்முடி பொழில்புனல் ஆடல்கள் ளுண்டல்
 
கூடுமகிழ்வு ஊடல்துனி புதல்வர்ப் பேறு
  கூறிடுமந் திரம்தூது செலல்போர் வென்றி
 
நீடுசந்தித் தொடர்ச்சிசுவை பாவம் தோன்ற
  நிகழ்த்துஇயம்பல் முதல்பெருங்காப் பியத்துக் கம்மா.’  
 

15