442        

   இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


உலா, இன்பமடல் என்பன

 
‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்
  கூறி,அவன் மறுகுஅணையக் காதல் கூர்ஏழ்
எழில்பேதை, பதினொன்று பெதும்பை, பன்மூன்று
  இயல்மங்கை, பத்தொன்பான் மடந்தை, ஐயைந்து
அழகுஅரிவை, முப்பஃதுஓர் தெரிவை, நாற்பான்
  ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்
தொழஉலாப் போந்ததுஉலா; தலைவன் பேர்க்குத்
  தொடைஎதுகை ஒன்றில்இன்ப மடலாய்ச் சொல்லே.’  
 

10

உலாமடல், அநுராகமாலை, தூது, எண்செய்யுள் என்பன

 

‘சொன்னமா தரைக்கண்டு கனவில் சேர்ந்தோன்
  துணிவன்மடல் என்றதுஉலா மடல்;பாங் கற்கே
இன்னல்உரைத் திடுதல்அநு ராக மாலை;
  இருதிணையை விடல்தூது ; இவ் வைந்தும் முற்பால்
பன்னுபொருள் இடம்காலம் தொழில்முப் பான்நாற்
  பான்எழுபான் தொண்ணுறு நூறால் வெண்பா
மன்னுகலித் துறையாதல் புகலப் பேரான்
  மாலையும்ஆம்; எண்ணாலும் மருவும் பேராம்.’   
 

 11

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை

மாலைகள், தானைமாலை, தாரகைமாலை என்பன.
‘மகிழ்நிரைகொள் வதுவெட்சி, கரந்தை மீட்டல்,
  மாற்றார்பால் செலல்வஞ்சி, ஊன்றல் காஞ்சி,
பகர்மதிலைக் காக்குமது நொச்சி, சுற்றிப்
  படைவளைத்தது உழிஞை,பொரல் தும்பை, வென்று
புகழ்படைத்தல் வாகையது மாலை, பேரால்
  போற்றுவது மாலையுமாப் புகல்வர்; தானை
அகலம்உரைப் பதுதானை மாலை, தூசி
  அணிவகுப்பில் தாரகைமா லையைச்சொல் ஆய்ந்தே.’   
 

12