| 
 | 
| எழுத்துப் பொருத்தமும் தானப் பொருத்தமும் 
 | 
| ‘ஆனஎழுத்து ஒன்பதுஏழ் 
ஐந்து மூன்றாம்; | 
|  | ஆகாதுஎட்டு ஆறுநான்கு ஆதிச் 
	சீர்க்கே; 
 | 
| ஊனம்இலா அஆவும் இஈ ஐயும் | 
|  | உஊவும் எஏயும் ஒஓ ஒளவும் 
 | 
| தானம்; இதை வகையாம்அந் தாதி தன்னில், | 
|  | தலைவன்பேர் முதல் எழுத்தில், பாலன் 
	ஆதி | 
|  | 
| மேல்நிரைஎண் ணில்பால குமார ராசர் | 
|  | வேண்டிடும்;வேண் டாவிருத்தம் மரணம் 
	தானே.’ | 
	|  | 3 | 
	| பாலும் உண்டியும் 
 | 
| ‘மருவுகுறில் ஆண்; நெடில்பெண்; அவர்இ வர்க்கா | 
|  | மயங்கினும்ஆம்; வரலாகா பேடுஒற்று 
	ஆய்தம்; 
 | 
	| உரியகச தநபமவ ஏழோடு ஆதி | 
	|  | உயிர்க்குறில்நான்கு 
		இவைஅமுதம் ஆதிச் சீர்க்கும் 
 | 
		| அரியதசாங் கத்தயற்கும் நலமது ஆகும்; | 
		|  | அமுதமொழிக்கு அல்லாத 
			எழுத்தும் கால்மாத் 
 | 
		| திரைஅளவுஅஃ கேனமுடன் மூன்றும் நஞ்சாய்ச் | 
		|  | செப்புஎழுத்து இவைஎல்லாம் 
			தீதாம் அன்றே.’ | 
			|  | 4 | 
				| வருணம் 
 | 
| ‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும் | 
|  | திருமறையோர்க்கு அடைவே;ஓர் 
	ஆறு வேந்தர்க்கு; 
 | 
| ஏதுஇல்லவ றன-கள்வணி கர்க்குஆம்; மற்றை | 
|  | எழுத்துளவை சூத்திரர்க்குஆம் இயன்ற 
	சாதி; 
 | 
	| ஓதிமன்தன் படைப்புஉயிரே; அரன்மால் செவ்வேள் | 
	|  | உம்பர்கோன் பரிதிமதி மறலி 
		நீர்க்கோன் 
 | 
		| காதல்அள கேசன்முதல் இவ்வி ரண்டாய்க் | 
		|  | கம்முதல்மூ வாறுஒற்றும் 
			கருதிச் செய்தார்.’ | 
			|  | 5 |