இணைமணிமாலை, இரட்டைமணிமாலை
‘வெண்பாக் கலித்துறையும் இருபது
அந்தாதியாய்
மேவுதொடையாய் வருவதின்
மிக்க ஆசிரிய விருத்தம் ஒருபத்துநேர்
வெண்பாவும் ஒருபத்துடன்
பண்பாய் உரைப்பது
இரட்டைமணிமாலை12 யாம்;
பாடுறும்
முறைமையினால்வெண்
பாவும்
அகவலும் வெள்ளையும் கலித்துறையுடன்
பகுத்தே
இரண்டிரண்டாய்
நண்பாய் இணைத்து
வெண்பா அகவல் மணிமாலை
நவிலும்
எழில்வெண்பாவுடன்
நற்கலித்துறை
இணைமணிமாலை என்னவே
நவில்நூறு
நூறதாக
எண்பா வலர்க்கு
இயைவுறும் சிறப்பாகவும்
எய்தும்
அந்தாதியால் சொற்கு
இயைந்த தொடையோ
நாலதாகவும் பண்புடன்
இயம்பல்
இணைமணிமாலையே.’13
10
நவமணிமாலை, நான்மணிமாலை
நாமமாலை, பல்சந்தமாலை
‘பகரும் வெண்பாமுதல்
வேறுபடு பாவும் அப்
பாஇனமதாய்
ஒன்பதாய்ப்
பண்புபொருள்
உறுசெய்யுள் அந்தாதி யாகவே
பாடல்
நவமணி மாலை14 யாம்;
நிகரில் வெண்பா
கலித்துறை விருத்தம் அகவல்
நேரும் அந்தாதித்தொடை
நிலைபெறவே
எண்ணைந்து செய்யுளாய்ச் சீருற
நிகழ்த்தல் நான்மணிமாலை15
யாம்;
|