மெய்க்கீர்த்திமாலை, காப்புமாலை, வேனில்மாலை,
வசந்தமாலை, வெகுவகுப்பு, தாரகைமாலை,
உற்பவமாலை
‘மருவு சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுள்
மரபுவழியிற் செய்திடும்
மற்புயன்
கீர்த்தியை விரித்து எடுத்து ஓதலே
வளரும் மெய்க்கீர்த்திமாலை;24
அரிய தெய்வம் காத்தலாக
மூன்றுஐந்து ஏழின்
அறைசெய்யுள்
காப்புமாலை;25
அருவேனில்
முதுவேனிலைச் சிறப்பித்து ஓதல்
ஆகுமே வேனில்மாலை;26
விரவு இளந்தென்றலை
வருணித்து உரைப்பதே மேலாம்
வசந்தமாலை;27
வெகுதூசியின்
படையின் அணியைப் புகழ்ந்திடும்
வெகுவகுப்பாம்;28 முறையின்
உரைஅருந்ததிக் கற்பின்
மாதர்கள் குணங்களை
ஓதல்
தாரகைமாலை29 யாம்;
உயர்மால்
பிறப்பு ஆசிரிய விருத்தத்தால்
உரைத்தல்உற்பவமாலை30யே.’
13
தானைமாலை, மும்மணிமாலை, தண்டகமாலை,
வீரவெட்சிமாலை
‘அகவலின் ஓசை பிறழாத
ஆசிரியமாய்
அதன்முனர் எடுத்துச்செலும்
ஆடிய கொடிப்படையினைப்
புகழ்ந்து உரைசெய்வது
ஆகுமே தானைமாலை;31
|