பகரும் வெண்பா கலித்துறை
அகவல் முப்பதும்
பன்னுதொடை அந்தாதியாய்ப்
பாடல் மும்மணிமாலை;32
வெண்பா முந்நூறுகவி
பாடல்
தண்டகமாலையாம்;33
மிகுசுத்த வீரன்
மாற்றார் புரம்சென்று பசு
வேட்டுநிரை
கவருதற்கு
வெட்சியின் மாலைசூடிய
வண்ணம் ஏகியே
மீட்டு ஆவின்நிரை
கவர்ந்தே
இகல்துறந்து ஊர்வரும்
தலைவன்மேல் பாவினுக்கு
இயைதசாங்கம்
பொருந்த
இசைவெற்றியைக்
கருதியே பாடஅது வீரம்
எனும் வெட்சிமாலை34
யாமே.’
14
வெட்சிக்கரந்தை மஞ்சரி, வஞ்சிமாலை,
போர்க்கெழுவஞ்சி, வரலாற்றுவஞ்சி,
எண்செய்யுள்
‘மாற்றலர்கள் கொண்டநிரை
மீட்போர் கரந்தைப்பூ
மாலைசூடிப்
போகி மீள்
வகையினை விரித்தோதல்
வெற்றிக் கரந்தையின்
மஞ்சரி35
எனக்கூறுவர்;
வேற்றுமைப் பகைவர்மேல்
போர்குறித்து ஏகுவது
வேந்தர்பூ
வஞ்சிமாலை;36
வேய்ந்துஎழு படைச்சிறப்பு
ஆசிரிய வகையினால்
விள்ளல்
போர்க்கெழுவஞ்சி37 யாம்;
பார்த்துநற் குலமுறை பிறப்புமேம்
பாட்டுடன்
பலசிறப்பும்
கீர்த்தியும்
பதிய வஞ்சிப்பாவினால்
தொகுத்தே புலவர்
பகரின் வரலாற்றுவஞ்சி;38
|