பாட்டியல் - பிற்சேர்க்கை 3

473


        ஏத்திடும் பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரினை

              எடுத்தும் எண்ணால் பெயர்பெற

 

          ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்

              எண்செய்யுள்39 ஆகும்அன்றே.’

    15

 

செருக்களவஞ்சி, காஞ்சிமாலை,

நொச்சிமாலை

 

     ‘சமரத்தில் அறுபட்ட மனிதன்உடல் பரிஉடல்

              தந்தி உடலங்கள்தனையும்

 

          தசைஇரத்தம் கூளிபேய் பிசாசம் கழுகு

              சம்புநாய் காகம்முதலா

 

     எமதுஎமது எனத்தின்னும் ஆரவாரத்து

              எக்களித்திருக்கப் பூதமும்

 

          இடைபாடி ஆடி இங்ஙனம் அருந்தச் சிறப்பு

              எய்திட உரைப்பதுவே

 

     அமர் செருக்களவஞ்சி 40 ஆகும்; பறந்தலை

              அணிசிறப்புச் செய்யுளாம்

 

          அலர்காஞ்சி மாலைசூடிப் பகைவர் ஊர்ப்புறத்து

              அதின்ஊன்றல் காஞ்சிமாலை41 ;

    

     கமையாய்ப் புறத்தகத்து ஊன்றிவலி பேசிடும்

              கள்ளர்கள் கோடல்இன்றிக்

 

          கந்தநொச்சியின் மாலைசூடித் தன்மதில் காத்தல்

              கழறல் நொச்சியின் மாலையே.’ 42     

  16

 

உழிஞைமாலை, தும்பைமாலை, வாகைமாலை,

வாதோரண மஞ்சரி

 

     ‘மருவலர்கள் ஊர்ப்புறம் சூழவே உழிஞைப்பூ

              மாலைசூடித் தானையான்

 

          மதியினை ஊர்வளைந்தாலென வளைப்பதை

              வழுத்தலே உழிஞைமாலை43 ;