474              

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்



பொருது மாற்றலரோடு தும்பைமாலிகை வேய்ந்து
               பொருதுவது தும்பைமாலை44 ;


        பொருபகையை வென்ற வாகைமாலை அணிவதைப்
              புகல்வது ஆசிரிய கவியா


வரும் வாகைமாலையாம்45; கொலைபுரி களிற்றினை
            மடக்கினவருக்கும் எதிரா


      அடர்புரி களிற்றைச் சிதைத்தடக்கினவர்க்கும்
            அமைதல்விட்டு ஓடுகளிற்றை


உரமுடன் பற்றிப்பிடித்து அடக்கினவருக்கும்
            உறும் வீரமும் சிறப்பும்


       ஓது வஞ்சிப்பாவினால் சொல் வாதோரணத்து
            உலவுமஞ்சரி46 ஆகுமே.

 17

தொகைச் செய்யுள், ஒலி அந்தாதி 


‘நெடிலடிச் செய்யுள் தொகுத்தது நெடுந்தொகையும்
             நேர்குறில் அடிச்செய்யுளால்


      நிரவித் தொகுத்தது குறுந்தொகை கலிப்பாவின்
            நேர்தொகுந் தொகையுமாய்


முடிவதே போல்வன தொகைச்செய்யுளாம்47 ;
             முறையின் ஈரெண் கலையையும்


     முடியஓர் அடியதாய் இங்ஙனம் நாலடியின்
            முடிதல் எண்ணெண் கலையதாம்


அடிகள்பல சந்தமாய் வண்ணமும் கலைவைப்பும்
              அந்தாதி தவறாமலே


        அலகு முப்பதுசெய்யுள் பாடுவதும் சிறுபான்மை
              ஆகும் எட்டுக் கலையெனும்


தொடர்வுறும் அன்றி வெண்பா அகவலும் கலித்
              துறையான இம்மூன்றையும்


        சோர்வில் பப்பத்தாக அந்தாதி யாகவும்
              சொல் ஒலியல்அந்தாதி48 யே. 

  18