பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா ‘பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள்
பற்றிடும் தன்மை தோன்றப்
பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது
பண் பதிற்றந்தாதி49யாம்;
வெற்றிவெண்பா நூறினாலும் கலித்துறையின் வீறுறும் நூறினாலும்
வினவி அந்தாதித்துரைத்தல்
நூற்றந்தாதி50;
மிக்க இளமைப் பருவமாய்
உற்ற தலைமகனைப் பிறப்பும் பரம்பரையில்
உறும்குலம் இன்னான் என்பதாய்
உயர்தலைமையாய் மாதர் புடைசூழவே பருவம்
உளபெண்கள் கண்டு தொழவே
மத்தகயம் மீதும் பரிசிவிகைமீதும் பவனி
வருதலைவனைத் துதித்து
மாண் நேரிசைக்கலியின் வெண்பாவினாற் கூறல்
வரும் உலா51 ஆகும்அன்றே.
19
உலாமடல், வளமடல், கைக்கிளை
‘கனவின்ஒரு மாதினைக் கண்டணைந்து இன்பம்
கலந்து பின்விழித்து மாதைக்
காணாமல் அவள்பொருட்டாக மடல் ஊர்வதைக்
கலிவெள்ளையால் அரற்றல்
இனை உலாமட52லாம்; அறம்பொருள் இன்பங்கள் இம்மூன்றும் கூறுபயன்
எள்ளி மங்கையர் திறத்துஉறும் காமஇன்பமதை யே பயன்கொண்டே தலை
20
|