|
கணநாட் பொருத்தம்
|
| ‘வான்இலகு நேர்,குருவே நிரையாம், வெண்சீர் |
| |
வரில்நப தவகணம்நாள் பரணி மும்மீன்
|
| ஊனம்மிகு புனர்பூசம் பூசம் வாழ்நாள் |
| |
உற்றபுகழ் சூனியநோய் பலன்கள் ஆகும்,
|
| தேன்அனையாய்! வஞ்சிச்சீர் அடைவே நான்கும் |
| |
திகழ்சர மயகணம்,நாள் சோதி ஆரல்
|
| தானம்உறு கேட்டைசத யந்தான் கேடு |
| |
சாவுதிரு மகிழ்ச்சிபலன் தரத் தொடங்கும்.’ |
| |
9 |
|
‘துறக்கம்மதி வான்பரிதி காய்ச்சீர் முன்னும் |
| |
சூழ்காற்றுத் தீநிலம்நீர் கனிச்சீர் பின்னும்
|
| நிறுத்துகணம் இவ்விரண்டாம் அகவற் சீரின் |
| |
நேர்ஈறு வெள்ளைச்சீர் நிறைவஞ் சிச்சீர்
|
| சிறப்புடைஇவ் விரண்டும்ஆம் கணப்பேர் மற்றும் |
| |
திகழ்இயற்சீர் அயன்திருக்கோக் கருடன் முன்னாம்
|
| வெறுத்தபின்னு மாம்என்ப இறைவன் நாட்கு |
| |
மேவுகண நாட்பொருத்தம் வேண்டும் மாதோ.’
|
| |
10 |
புறனடை
|
| ‘ஆவதுமங் கலத்தேற்ற பரியாயச் சொல் |
| |
அடைகொடுத்து முதற்சீருக்கு அடுத்த செய்யுள்
|
| மேவுதலை இடைகடைமங் கலச்சொல் வைத்து |
| |
விதிஎடுத்துப் பால்வருணம் மயங்கும் என்ப;
|
| வாவும்ஒரு நற்கதியால் முன்னோர் நூலின் |
| |
மங்கலத்தால் நஞ்சுசில அமுதம் ஆகும்;
|
| தூஅமுதம் எனின்கதியில் பழுது போமேல் |
| |
தொடர்கலப்பாம் மரபினது தொடக்கம் சொல்வாம்.’
|
| |
11
|