பாட்டியல் - பிற்சேர்க்கை 1   

439



5. மரபியல்

 ‘துறுகொலைநீக் கித்தெய்வக் காப்பாய்ச் சுற்றத்
   தொகைஅளவு வகுப்புஅகவல் விருத்தம் தன்னால்
முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி
  முத்தம்வா ரானைஅம் புலியி னோடு
சிறுபறைசிற் றில்சிறுதேர் இவை;பின் மூன்றும்
  தெரிவையர்க்குப் பெறாகழங்குஅம் மானை ஊசல்
பெறுமூன்று முதல்இருபத் தொன்றுள் ஒற்றை
  பெறுதிங்கள் தனில்பிள்ளைக் கவியைக் கொள்ளே.’   
 

1

கலம்பகம்

 

‘கொண்டபுயம் தவம்மதங்குஅம் மானை காலம்
  குறம்களிசம் பிரதம்மறம் பாண்சார் தூது
வண்டுதழை கைக்கிளைசித்து இரங்கல் ஊசல்
  மடக்குமருட் பாஅகவல் விருத்தம் வெண்பா
வெண்டுறைவஞ் சித்துறைஆ சிரியம் வஞ்சி
  விருத்தப்பா கலியினம்அந் தாதி யாகக்
கண்டவைமுன் ஆதிஒரு போகு வெண்பாக்
  கலித்துறைநேர் கூறல்கலம் பகமது ஆமே.’ 
 

2

 கலம்பகச் செய்யுள், பன்மணி மாலை,

அகப்பொருட் கோவை என்பன.

 

 ‘அன்புறுதே வர்க்குநூறு; இழிபுஐந்து ஐயர்க்கு;
  அரசர்க்குத் தொண்ணூறு வணிகர்க்கு ஐம்பான்;
இன்புறுமுப் பான்உழவர்க்கு; அமைச்சி னுள்ளோர்க்கு
  எழுபதுஎனும்; கலம்பகத்துஅம் மானை ஊசல்
முன்புஒருபோகு ஒழிந்ததுபன் மணிமா லைப்பேர்;
  மொழிவெள்ளை நூறுகலித் துறைநூ றாதல்
நன்குஉறில்அந் தாதி;கலித் துறைநா னூறாய்
  நடப்பதுஅகப் பொருட்கோவை நாமம் மன்னோ.’  
 

3