பொழுது ஆழ்வார்திருநகரியில், தாயவலந்தீர்த்தான்கவிராயர் வீட்டிலிருந்து இதன் ஏட்டுப்பிரதியொன்று கிடைத்தது. அது தமிழ்கற்பவர்க்குப் பெரிதுமுபகாரமாவதென்று கருதிச் சங்கப்பிரசுரங்களுள் முதலிற் றொடங்க வேண்டியவற்றுளொன்றாக மதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது பரிசோதனைக்குப் போதுமான வேறுபிரதிகள் கிடையாதிருந்தமையாற் காலந்தாழ்க்கப்பட்டிருந்தது. பின்பு மற்றொரு குறைப்பிரதியும் சங்கத்துக்குக் கிடைத்திருக்கிறது. அது இன்னாராற் கொடுக்கப்பட்டதென்பது தெரியவில்லை. செந்தமிழ்ப்பத்திராதிபத்தியப்பொறை சிறியேன்மீதேறிய பின்பு அதன் பிரசுரத்துக் கவசியமாக இந்நூலெடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அப்பொழுது சங்கத்திலிருந்த பிரதிகளிரண்டையும் வைத்துக்கொண்டே யிடர்ப்பாடுற் றச்சிட்டுச் சிலபாரங்கள் வெளியிட்டுவந்த எளியேன்மீ தன்புகூர்ந்து எனதுவேண்டுகோட்கிணங்கி மஹாமஹோபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதையரவர்களும், புதுக்கோட்டைக்காலேஜ் பிரின்ஸிபாலாகவிருந்த ஸ்ரீமத். எஸ். இராதாகிருஷ்ணையர் B.A., F.M.U., அவர்களும் அருமையாயெழுதி வைத்திருந்த பிரதிகளையருளி யுபகரித்தார்கள். அவர்களது தாராளசிந்தை மிகவும் பாராட்டற்பாலது. அப்பிரதிகளுள் மஹாமஹோபாத்தியாயரவர்களது பிரதி சிலபிரதிகளோ டொப்புப்பார்த்துப் பிரதிபேதங் குறிக்கப்பட்டதாயுமிருந்தது மிகவும் சாதகமாயிற்று. அதன்பின்பு பரங்கிப்பேட்டை ஸ்ரீமத்-இலக்குமணப்பிள்ளையவர்களா லொருபிரதி கொடுக்கப்பட்டது. ஆக நான்கு பூரணமான பிரதிகளையும் ஒரு குறைப்பிரதியையும் வைத்து மேலே பார்க்கும்பொழுது இதனுரையானது செப்பஞ்செய்யாது முற்படவரைந்தவரைவேபோல ஒருமுறைப்பாடின்றிச் சில இடத்துப் பதவுரையாகவும், சில இடத்துக் குறிப்புரையாகவும், சில இடத்து விரித்துரையாகவும், சில இடத்துக் கருத்துரையாகவும், சில இடங்களிற் பிரதீகங்காட்டியும், சில இடங்களிலவை காட்டாமலும், சில இடங்களிற் சொன்முடிபில்லாமலும், சில இடங்களிற் றிணை |