முகப்புதொடக்கம்
6முகவுரை

துறைகளின் பெயரெழுதற் கிடம்விட்டும் மேற்கோள்களிற் சிலவற்றிற்கு ஆகரங்காட்டியும் பலவற்றிற்கு அவை காட்டாமலும் பிரதிகளெல்லாம் ஒரேபடியா யெழுதப்பட்டிருந்தன. பிழைபாடில்லாத பெரும்பாகங்களைப் பிரதிகளிலுள்ளவாறெழுதியும், சொன்முடிபு, பிரதீகம் இவையில்லாத இடங்களில் அவற்றையமைத்தும் சில முக்கியமான பிழைகளைத் திருத்தியும், திணை துறைகளின் பெயரெழுதாத இடங்களிற் புள்ளியொற்றியும் ஒருவா றச்சிடப்பட்டிருக்கிறது.

குளகவகையுள், கலாபம் அல்லது கலாபகம் என்று வழங்கத்தகும் பெயரை மூலத்துள்ளும் உரையுள்ளும் எல்லாப்பிரதிகளிலும் காபாலிக மென்றெழுதியிருந்தமையால் எழுத்து நிலைமாறி விகாரப்பட்டிருக்கலா மென்றெண்ணி யிருந்தபடியே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

அன்றியும், ஓரிடத்தெடுத்துக்காட்டிய இலக்கணமேற்கோளைப் பின்னும் பல இடங்களிற் காட்டியும், விரிக்கவேண்டாத சில விஷயங்களைச் சில இடத்து விரித்தும், விரிக்கவேண்டிய விஷயங்களை ஒரோவழி விரியாதுவிடுத்தும், எழுதியிருக்குமவைகளும் இருந்தபடியே பதிக்கப் பட்டிருக்கின்றன.

ஆயினும், முதலில் தற்சிறப்புப் பாயிரமென்று காட்டப்பட்டிருக்கும் 5-பாடல்களில், 4-ஆம் பாட்டின்முன் அவையடக்கமென்றும், 5-ஆம் பாட்டின்முன் பனுவல்வாழ்த்தென்றும் எழுதிக்கொள்ளவேண்டும். இவற்றுள், “ஆக்கமுறக்காக்க” என்னும் முதலையுடையபாட்டு அதிக பாடமாயிருக்கிறது.

இந்நூலின் மூலசூத்திரங்களைப்பற்றி,

“பதிகம்பொதுவெழுபத்தொன்றிருபத்தொன்
றதிகபொருணூற்றிருபத்தைந்தா--முதுசொல்
லணியியலைம்பத்துநாலாதரவாமெச்சங்
கணியிருபத்தெட்டாகுங்காண்”

என ஒரு தொகைச்செய்யுள் இரண்டுபிரதிகளில் மட்டுங் காணப்பட்டது. அவற்றுள் ஒன்று மூலசூத்திரங்கள்மாத்திரம் எழுதியபாகமாயுள்ளது.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்