முகப்புதொடக்கம்
மாறனலங்காரவரலாறு 15

மாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை, இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும் அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய் நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன. பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன. நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம் மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.

இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.

“ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்