“வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்--தோய்ந்துளதாற் காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க வேண்டுமோவீங்கிதற்குமேல்” |
சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில் இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம். கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய் முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன், தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார். மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும், மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில் இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர் இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர். முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும், முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும் இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது. எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத் தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நூலாசிரியர் பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள். “திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
|