“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள் பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன் மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன் திருக்குருகைப்பெருமாள்கவிராசன் அருட்குணத்தவர்புகழ்சடையன் பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே” (மாறனகப்பொருட்பாயிரம்) |
“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந் தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித் திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே” (திருக்குருகாமான்மியப்பதிகம்) முதலியன. மதம் :- வைணவம். இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும், ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர். ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர் ‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும் மாறனலங்காரப் பாயிரத்தாலும், ‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது. அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :- “முத்திக்கவனேமுதற்காரணனென்றும் பத்திவிடாதேபயிலென்றுஞ்--சத்தியமாய்ச் செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த சொல்வித்தகமேதுணிந்து” (காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து) “முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான் பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச் சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே னாவிக்கருள்புரிந்தாள்வான்” (திணை : வாகை, துறை : தாபதவாகை) |