இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ; திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக) இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள். இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது, பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும். “இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான் சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே” |
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது. இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது. இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :- 1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும். 2. திருக்குருகாமான்மியம். 3. நம்பெருமாள் மும்மணிக்கோவை. 4. மாறன் கிளவிமணிமாலை முதலியன. இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.* காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும், இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-
*மாறனலங்காரத்தில் 94-ம் பக்கம் கௌடச்சமநிலைக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட ‘பனிப்பிறை’ என்னும் முதற்குறிப்புள்ள 95-ம் பாட்டு, மேற்படி திருப்பதிக்கோவையில் 208-ம் பாடலாகச் சிறிது பாடபேதத்துடன் காணப்படுவது ஆராயத்தக்கது (பதிப்பாசிரியர்).
|