முகப்புதொடக்கம்
20 மாறனலங்காரவரலாறு

அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
                லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
                தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
                சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
                பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”

இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது. குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம். ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும். ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது. உரையாசிரியர் காலமும் இதுவேயாகும். இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம் வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள் இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய், மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும், பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.

“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்